
M. பருஷோத்தம ராவ்
ஒட்டகம் சோப், புதுக்கோட்டை
LoadingRepresenting Tamil Nadu's small-scale soaps & detergents industry since 1963
Established 1963
A collective voice for Tamil Nadu's soaps & detergents manufacturers.
Since 1963, TANSDMA has grown through the commitment of its office bearers and members. Explore the association's presidential journey from its founding to today.
தமிழ்நாடு சிறுதொழில் சோப் உற்பத்தியாளர்கள் சங்கம் 1964-ஆம் ஆண்டில் திரு.வி.எ.முத்தையா அவர்கள் தலைமையில் அவரது இல்லத்தில் நடந்த கூட்டத்தில் உருவானது. சென்னை ஓபிட் ஹார்ஸ் சோப் அதிபர் திரு. டி.பங்காரு செட்டியார் தலைவராகவும், புதுக்கோட்டை ஒட்டகம் சோப் மேனேஜர் திரு.எம்.ஏ.புருஷோத்தமன் அவர்கள் துணைத்தலைவராகவும், தாஸ் சோப் உரிமையாளர் திரு. டி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் செயலாளராகவும் பொறுப்பேற்றார்கள்.
தமிழகத்திற்கு மட்டன் டாலோ பங்கீட்டை அதிகப்படுத்துவதில் ஆற்றிய பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து திரு. எம்.ஏ. புருஷோத்தமன் அவர்கள் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள். சிக்கல்கள் நிறைந்த காலகட்டத்தில் அவர் சங்கத்தை மிகவும் திறம்பட நடத்தினார்கள். அவரை தொடர்ந்து மதுரை வி.எஸ்.செல்லம் நாடார் அவர்கள் தலைமை பொறுப்பேற்றார்கள்.
அப்போது மதுரையிலிருந்து சிவன் சோப் அதிபர் பரமசிவ நாடார், வி.நாதன் சோப் அதிபர் வி.சுந்தரம், சுந்தரம் சோப் அதிபர் கே.சுந்தரம், சவரன் சோப் அதிபர் பி.ராமராஜ் அவர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக சேர்க்கப்பட்டோம்.
திரு.வி.செல்லம் நாடார் அவர்கள் ஐந்து ஆண்டுகள் தலைவராக பதவி வகித்தார்கள். அவர் காலத்தில் தான் சங்கத்திற்கு சொந்தமாக இடம் வேண்டுமென்ற எண்ணத்திற்கான விதை ஊன்றப்பட்டது.
திரு.பு.ஏ.கிருஷ்ணன் அவர்கள் 20 ஆண்டுகள் செயலாளராக இருந்து நமது சங்கத்தை சிறப்புற வழி நடத்தினார்கள். அடுத்ததாக கோவை ஆரியன் சோப் அதிபர் திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைவராக பொறுப்பேற்றார்கள். இவர்களின் காலத்தில் டிடர்ஜெண்ட் சோப் தமிழகத்தில் கைத்தொழிலாக அறிமுகமானது.
நமது சிறுதொழில் சோப் உற்பத்தியாளர்கள் சங்கம் 1978-ல் தமிழ்நாடு சிறுதொழில் சோப் & டிடர்ஜெண்ட் உற்பத்தியாளர் சங்கம் என அமைப்புக்கு வேண்டுமென வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின் பொன்னண்டு சோப் அதிபர் திரு.ஏ.ஜெயராஜ் அவர்கள் தலைவராகவும், சென்னை சித்ரா சோப் அதிபர் திரு.கே.வி.கணேசன் செயலாளராகவும் பொறுப்பேற்றார்கள். அவர்கள் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சென்று வசூல் செய்தும் சங்கத்திற்கு ஒரு சொந்த இடம் வாங்கினோம்.
அவரைத் தொடர்ந்து நான் தலைவராக பொறுப்பேற்றேன். எனது காலத்தில் தலைவர் பொறுப்பானது மூன்று வருடத்திற்கு ஒருமுறை என நிர்ணயம் செய்யப்பட்டது. உறுப்பினர்கள் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினோம். மேலும் சோப்பிற்கான விற்பனை வரி விலக்கு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் தமிழ்நாட்டின் பிற ஊர்களிலும் நடக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சென்னை மாஸ் புராடக்ட்ஸ் அதிபர் திரு.ஆர்.ஜாபர் பாய் அவர்களும், புதுக்கோட்டை அன்னை சோப் பங்குதாரர் திரு.வி.எ.அண்ணாதுரை துணைத் தலைவராகவும், திரு.கே.வி.கணேசன் செயலாளராகவும் ஒருங்கிணைந்து பணியாற்றினோம். திரு.கே.வி.கணேசன் செயலாளராகவும் தொடர்ந்து பணியாற்றினார்.
1963
The year TANSDMA began representing Tamil Nadu's small-scale soaps and detergents industry.

ஒட்டகம் சோப், புதுக்கோட்டை

ஒலிம்பாஸ் சோப், சென்னை

V.S. செல்லம் சோப், மதுரை

ஆரியன் சோப், கோவை

ஜெயா சோப், சென்னை

சுந்தரம் சோப், மதுரை
தமிழ்நாடு சிறுதொழில் சோப் உற்பத்தியாளர்கள் சங்கம் 1964-ஆம் ஆண்டில் திரு.வி.எ.முத்தையா அவர்கள் தலைமையில் அவரது இல்லத்தில் நடந்த கூட்டத்தில் உருவானது. சென்னை ஓபிட் ஹார்ஸ் சோப் அதிபர் திரு. டி.பங்காரு செட்டியார் தலைவராகவும், புதுக்கோட்டை ஒட்டகம் சோப் மேனேஜர் திரு.எம்.ஏ.புருஷோத்தமன் அவர்கள் துணைத்தலைவராகவும், தாஸ் சோப் உரிமையாளர் திரு. டி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் செயலாளராகவும் பொறுப்பேற்றார்கள். தமிழகத்திற்கு மட்டன் டாலோ பங்கீட்டை அதிகப்படுத்துவதில் ஆற்றிய பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து திரு. எம்.ஏ. புருஷோத்தமன் அவர்கள் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள். சிக்கல்கள் நிறைந்த காலகட்டத்தில் அவர் சங்கத்தை மிகவும் திறம்பட நடத்தினார்கள். அவரை தொடர்ந்து மதுரை வி.எஸ்.செல்லம் நாடார் அவர்கள் தலைமை பொறுப்பேற்றார்கள். அப்போது மதுரையிலிருந்து சிவன் சோப் அதிபர் பரமசிவ நாடார், வி.நாதன் சோப் அதிபர் வி.சுந்தரம், சுந்தரம் சோப் அதிபர் கே.சுந்தரம், சவரன் சோப் அதிபர் பி.ராமராஜ் அவர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக சேர்க்கப்பட்டோம்.
திரு.வி.செல்லம் நாடார் அவர்கள் ஐந்து ஆண்டுகள் தலைவராக பதவி வகித்தார்கள். அவர் காலத்தில் தான் சங்கத்திற்கு சொந்தமாக இடம் வேண்டுமென்ற எண்ணத்திற்கான விதை ஊன்றப்பட்டது.
திரு.பு.ஏ.கிருஷ்ணன் அவர்கள் 20 ஆண்டுகள் செயலாளராக இருந்து நமது சங்கத்தை சிறப்புற வழி நடத்தினார்கள். அடுத்ததாக கோவை ஆரியன் சோப் அதிபர் திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைவராக பொறுப்பேற்றார்கள். இவர்கள் காலத்தில் டிடர்ஜெண்ட் சோப் தமிழகத்தில் கைத்தொழிலாக அறிமுகமானது. நமது சிறுதொழில் சோப் உற்பத்தியாளர்கள் சங்கம் 1978-ல் தமிழ்நாடு சிறுதொழில் சோப் & டிடர்ஜெண்ட் உற்பத்தியாளர் சங்கம் என அமைப்புக்கு வேண்டுமென வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின் பொன்னண்டு சோப் அதிபர் திரு.ஏ.ஜெயராஜ் அவர்கள் தலைவராகவும், சென்னை சித்ரா சோப் அதிபர் திரு.கே.வி.கணேசன் செயலாளராகவும் பொறுப்பேற்றார்கள். அவர்கள் காலத்தில் நாங்கள் அனைவரும் தமிழ்நாடு முழுவதும் சென்று வசூல் செய்தும் சங்கத்திற்கு ஒரு சொந்த இடம் வாங்கினோம்.
அவரைத் தொடர்ந்து நான் தலைவராக பொறுப்பேற்றேன். எனது காலத்தில் தலைவர் பொறுப்பானது மூன்று வருடத்திற்கு ஒருமுறை என நிர்ணயம் செய்யப்பட்டது. உறுப்பினர்கள் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினோம். மேலும் சோப்பிற்கான விற்பனை வரி விலக்கு. பொதுக்குழு கூட்டங்கள் தமிழ்நாட்டில் பிற ஊர்களிலும் நடக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னை மாஸ் புராடக்ட்ஸ் அதிபர் திரு.ஆர்.ஜாபர் பாய் அவர்களும், புதுக்கோட்டை அன்னை சோப் பங்குதாரர் திரு.வி.எ.அண்ணாதுரை துணைத் தலைவராகவும், திரு.கே.வி.கணேசன் செயலாளராகவும் ஒருங்கிணைந்து பணியாற்றினோம். திரு.கே.வி.கணேசன் செயலாளராகவும் தொடர்ந்து பணியாற்றினார்.
திரு. கே.வி.கணேசன் மறைவிற்குப்பின் திரு.வி.பி.அசோகன் செயலாளராக பதவியேற்றார். எனக்குப்பின் வந்த திரு. ஆர்.ஜாபர் பாய் மிக நெருங்கிய காலத்தில் உடல்நலக்குறைவினால் மரணமடைந்தார் என்ற செய்தி மிக வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து பொள்ளாச்சி சபரி சோப் அதிபர் திரு.ந.கண்ணன் அவர்கள் தலைவரானார். அவர் நம் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து காலத்தில் சோடா ஆஷ் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்து அதில் முழுவெற்றியும் பெற்றார். அதன்பின்பு சங்கத்தின் நீண்டகால உறுப்பினராக செயல்பட்டு சென்னை வி.எஸ். கிருஷ்ணன் அவர்கள் தலைவராக பொறுப்பேற்றார். அவர் குடும்பங்களுடன் இணைந்து சங்க வளர்ச்சிக்காக செயல்பட்டோம். மேலும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமாக உயர்த்தினோம்.
தற்போது பவர் சோப் அதிபர் திரு.கே.தனபால் அவர்கள் தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அவர் பொறுப்பேற்ற உடன் மதுரையிலுள்ள மதுரை மாஸ்டர் திரு. குமரேந்திரன் சங்கத்துடன் (மட்டுமில்லா) இணைந்து - டிபர்ஜென்ட் சோப் தொழிலில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்கள் பற்றிய பல நாள் கருத்தரங்குகளை மிகச்சிறப்பாக நடத்தினார்கள்.
தலைவர் திரு.கே.தனபால் அவர்கள் தலைமையில் சங்கத்தின் Explore The Unexplored 2019 மற்றும் பலன் வெளிப்படும் கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சி ஏற்பாடுகள் அனைவரும் பாராட்டும் வகையில் நடைபெற்று வருகிறது. மேலும் கமிட்டித்தலைவர் திரு.அ.ஜெ.சரவணன் அவர்களும் துணைத்தலைவர் வி.எஸ். மணிமாறன் அவர்களும் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் தேனீக்கள் போல் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாடு சிறுதொழில் சோப் உற்பத்தியாளர்கள் சங்கம் 1964-ஆம் ஆண்டில் திரு.வி.எ.முத்தையா அவர்கள் தலைமையில் உருவானது. சென்னை ஓபிட் ஹார்ஸ் சோப் அதிபர் திரு.டி.பங்காரு செட்டியார் தலைவராகவும், புதுக்கோட்டை ஒட்டகம் சோப் மேனேஜர் திரு.எம்.ஏ.புருஷோத்தமன் துணைத்தலைவராகவும், தாஸ் சோப் உரிமையாளர் திரு.டி.ஏ.கிருஷ்ணன் செயலாளராகவும் பொறுப்பேற்றார்கள்.
அவர்களைத் தொடர்ந்து திரு.எம்.ஏ.புருஷோத்தமன், மதுரை வி.எஸ்.செல்லம் நாடார், கோவை ஆரியன் சோப் அதிபர் திரு.ஸ்ரீனிவாசன் மற்றும் பொன்னண்டு சோப் அதிபர் திரு.ஏ.ஜெயராஜ் ஆகியோர் தலைமை பொறுப்பேற்றார்கள். அவர்களின் காலத்தில் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்ததுடன், தமிழ்நாடு முழுவதும் சென்று வசூல் செய்து சங்கத்திற்கு சொந்த இடமும் வாங்கப்பட்டது.
அவரைத் தொடர்ந்து நான் தலைவராக பொறுப்பேற்றேன். எனது காலத்தில் தலைவர் பொறுப்பு மூன்று வருடத்திற்கு ஒருமுறை என நிர்ணயம் செய்யப்பட்டது. உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது, சோப்பிற்கான விற்பனை வரி விலக்கு மற்றும் தமிழ்நாட்டின் பிற ஊர்களிலும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மாஸ்டராட்கல், சென்னை

சபரி சோப், பொள்ளாச்சி

மெட்ராஸ் கெமிக்கல்ஸ், சென்னை
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தன்னம்பிக்கை தான் முக்கிய காரணம். அதோடு கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
1973-ம் ஆண்டு அமராவதியில் உள்ள நரோடா இண்டஸ்ட்ரியியல் எஸ்டேட்டில் நிர்மா டிடர்ஜெண்ட் சோப்பு உற்பத்தி நிறுவனத்தை நேரில் பார்த்தேன். சிறிய கட்டடத்தில் சுமார் 10-15 பெண்கள் சோப்பு பவுடரை உற்பத்தி செய்து, அட்டை பெட்டிகளில் கட்டி சைக்கிளில் எடுத்துச் சென்றனர். உரிமையாளர் திரு. ஹாஸ்முக் பாய் படேல் அவர்களின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை டிடர்ஜெண்ட் சோப்பு உற்பத்தியின் தந்தை என்ற நிலைக்கு உயர்த்தியது.
டாடா நிறுவனத்தின் வளர்ச்சியும் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். சிறிய முயற்சிகளிலிருந்து தொடங்கி இன்று உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் சிறந்து விளங்குவதுடன், பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு. நாராயணமூர்த்தி அவர்கள் தனது நிறுவனத்தை தொடங்கும்போது போதிய பண வசதி இல்லாமல் இருந்தார். அவரது மனைவி திருமதி. சுதா அவர்கள் தன்னிடம் இருந்த நகைகளை விற்று ரூ.25,000 வழங்கினார். அந்த சிறிய முதலீட்டில் தொடங்கிய நிறுவனம் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உலக அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.
பொன்னண்டு சோப்பு நிறுவனத்தின் மறைந்த திரு. ஜெயராஜ் அவர்கள் சிறிய அளவில் சோப்பு உற்பத்தியை தொடங்கி, சைக்கிளில் எடுத்துச் சென்று விற்பனை செய்தார். தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தொழிலை விரிவுபடுத்தி, பொன்னண்டு சோப்பை தென்னிந்தியாவில் பிரபலமான நிறுவனமாக வளர்த்தார்.
பவர் சோப்பு நிறுவனத்தின் திரு. தனபால் அவர்கள் குறைந்த வசதிகளுடன் தனது தொழிலை தொடங்கினார். பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட போதிலும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கைவிடாமல் உழைத்து, பவர் சோப்பு நிறுவனத்தை பெரிய அளவில் வளர்ச்சியடையச் செய்தார்.
இதுபோல் நாம் நேரில் பார்க்கின்ற பல வளர்ந்தவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கையும் கடின உழைப்புமே முக்கிய காரணமாக உள்ளது. எனவே எந்த வேலையை மேற்கொண்டாலும் தன்னம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
தமிழ்நாடு சிறுதொழில் சோப் உற்பத்தியாளர்கள் சங்கம் 1964-ஆம் ஆண்டில் திரு.வி.எ.முத்தையா அவர்கள் தலைமையில் உருவானது. சென்னை ஓபிட் ஹார்ஸ் சோப் அதிபர் திரு.டி.பங்காரு செட்டியார் தலைவராகவும், புதுக்கோட்டை ஒட்டகம் சோப் மேனேஜர் திரு.எம்.ஏ.புருஷோத்தமன் துணைத்தலைவராகவும், தாஸ் சோப் உரிமையாளர் திரு.டி.ஏ.கிருஷ்ணன் செயலாளராகவும் பொறுப்பேற்றார்கள்.
அவர்களைத் தொடர்ந்து திரு.எம்.ஏ.புருஷோத்தமன், மதுரை வி.எஸ்.செல்லம் நாடார், கோவை ஆரியன் சோப் அதிபர் திரு.ஸ்ரீனிவாசன் மற்றும் பொன்னண்டு சோப் அதிபர் திரு.ஏ.ஜெயராஜ் ஆகியோர் தலைமை பொறுப்பேற்றார்கள். அவர்களின் காலத்தில் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்ததுடன், தமிழ்நாடு முழுவதும் சென்று வசூல் செய்து சங்கத்திற்கு சொந்த இடமும் வாங்கப்பட்டது.
அவரைத் தொடர்ந்து நான் தலைவராக பொறுப்பேற்றேன். எனது காலத்தில் தலைவர் பொறுப்பு மூன்று வருடத்திற்கு ஒருமுறை என நிர்ணயம் செய்யப்பட்டது. உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது, சோப்பிற்கான விற்பனை வரி விலக்கு மற்றும் தமிழ்நாட்டின் பிற ஊர்களிலும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Power Soap

XXX Soap, Guntur

Ponvandu Soap
Historical archive
Past presidential names, photographs and service periods will be added here as the association's historical records are confirmed.